வேற்றுமைவகைகள் 8 வகைப்படும். வேற்றுமை உருபுகள் 6 வகைப்படும்.
முதல் வேற்றுமை பெயர் வேற்றுமை எனப்படும். இவ்வேற்றுமை உருபு எதுவும் ஏற்காது.
எட்டாம் வேற்றுமை விளித்தல் (அழைத்தல்) பொருளில் வருவதால் விளிவேற்றுமை என்று கூறப்படும். இவ்வேற்றுமை உருபு எதுவும் ஏற்காது.ும். இவ்வேற்றுமை உருபு எதுவும் ஏற்காது.
வேற்றுமை வகைகள் | உருபுகள் | சொல்லுருபு: சில வாக்கியங்களில், உருபிற்குப் பதிலாக சொல்லுருபைப் பயன்படுத்துவர். | பொருள் | எ+கா |
---|---|---|---|---|
முதலாம் வேற்றுமை = எழுவாய் வேற்றுமை | / | / | எழுவாய் | |
இரண்டாம் வேற்றுமை = செயப்பாட்டுபொருள் | ஐ | ஆக்கல், அழித்தல், நீத்தல், ஒத்தல், உடைமை | படத்தை வரைந்தான். வீட்டை இடித்தான். நாட்டை விட்டுச் சென்றனர். புலியைப் போன்ற வீரம். செல்வம் உடையவன். | |
மூன்றாம் வேற்றுமை | ஆல்,ஆன்,ஓடு,ஒடு | கொண்டு, உடன் | கருத்தா = வினை செய்பவனைக் குறிக்கும், கருவி, உடனிகழ்ச்சி | ஓவியரால் படம் வரையப்பட்டது. கத்தியால் வெட்டினான். குழந்தை தாயோடு பள்ளி சென்றது. |
நான்காம் வேற்றுமை | கு | ஆக, என்று, நிமித்தம் | கோடல்(ஏற்றல்), பகை, நட்பு, தகுதி, முதற்காரணம், நிமித்தற்காரணம், முறை | முலைக்கு தேர் கொடுத்தான் பாரி. வலிக்கு மருந்து மாறனுக்கு நண்பன் சேரன். மாதனுக்கு சிறப்பு மாந்தநேயம். பள்ளிக்கு நூல் வாங்கினான். மக்களின் உரிமைக்கு போராடினர். தாய்க்கு மகள் |
ஐந்தாம் வேற்றுமை | இல் இன் | இருந்து நின்று | நீங்கல் ஏது ஒப்பு எல்லை | பள்ளியிருந்து விலகினான். அறிவில் சிறந்தவன் ஆசான். கண்ணனில் சேரன் நல்லவன். கிளிநொச்சியின்மேற்கே மன்னார் உள்ளது. |
ஆறாம் வேற்றுமை | அது இன் | உடைய | உடைமை | சேரனின் நூல் அவனது கை |
ஏழாம் வேற்றுமை | கண் இல் | இடம் | ஊரின் கண் கோவில் | |
எட்டாம் வேற்றுமை | விளி | மன்னா!வாழ்க! |
குறிப்பு : ‘இல்’ என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையில் வந்துள்ளதை அறிவீர்கள். ஐந்தாம் வேற்றுமையில் ‘இல்’ என்னும் உருபு ஒப்புப்பொருளிலும், ஏதுப்பொருளிலும் வந்துள்ளது.
ஏழாம் வேற்றுமையில் ‘இல்’என்னும் உருபு இடப்பொருளாகவே வரும்.