எழுவாய் பயனிலை செயப்படுபொருள்
தமிழ் இலக்கணத்தில் சொல்லிய உருபுகள் நான்குவகையாக வகுக்கப்படும்.
அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை,அடைமொழி என வகுப்பார்கள்.
ஒரு முற்றுப்பெற்ற சொல்லியத்தில் எழுவாய், பயனிலை இடம்பெறும்.
எ+கா: நான் படித்தேன்.
எவ்வாறு எழுவாயை இனம் காணலாம் ?
யார், எது, எவை, என வினவும் போது கிடைக்கும் பதில் எழுவாய் ஆகும். எடுத்துக்காட்டாக "கண்ணன் சதுரங்கம் விளையாடினான்.“ என்ற சொல்லியத்தில் 'கண்ணன்' என்ற பெயர்ச்சொல் எழுவாயாக அமைந்துள்ளது.
எழுவாய் பெயர்ச்சொற்களைக் கொண்டது. இது தனிச்சசொல்லாகவும் சொற்றொடராகவும் அமையலாம்.
எழுவாய் முதலில் அமையவேண்டியதில்லை. எழுவாய் இடையிலும் சொல்லியத்தின் இறுதியிலும் இடம்பெறலாம்.
பயனிலை என்றால் என்ன ?
பயனிலை பெரும்பாலும் வினைச்சொல்லாக இருக்கும்.
ஒரு வாக்கியத்தில் பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொல் (வினை முற்று) பயனிலை எனப்படும்.
எடுத்துக்காட்டாக "கண்ணன் சதுரங்கம் விளையாடினான்“என்ற வாக்கியத்தில்
விளையாடினான் பயனிலை ஆகும்.
வாக்கியங்களில் எழுவாய் பயனிலையுடன் செயற்படுபொருள் என்றொரு உறுப்பும் இடம்பெறும்.
செயற்படுபொருள் என்றால் என்ன ?
செயலுக்கு உட்படுத்தப்படும் பொருள் செயற்படுபொருள் ஆகும்.
„கண்ணன் சதுரங்கம் விளையாடினான்.“
இதில் சதுரங்கம் ஆகும்.
அடைமொழி என்றால் என்ன?
ஒருப் பொருளின் சிறப்பைக் காட்டவும் குணத்தைக் உணர்த்தவும் அடைமொழி பயனுபடுத்தப்படுகின்றது.
எ+கா:
பூனை பந்து விளையாடியது.
வெள்ளைப் பூனை நீலப்பந்துடன் ஆர்வத்துடன் விளையாடியது.
பயிற்சி
தரப்பட்ட சொல்லியத்தில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை,அடைமொழியை இனம் காணுக.
Laden
Laden
Laden