பகுபத உறுப்புகளான பகுதியையும் விகுதியையும் அல்லது இடைநிலையையும் விகுதியையும் இணைப்பதற்குப் பயன்படும் பகுபத உறுப்பு சாரியை எனப்படும்.
சார் + இயை = சாரியை,
அதாவது சார்ந்து வருவது சாரியை ஆகும்.
பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவற்றுக்குப் பொருள் உண்டு.
ஆனால், சாரியைக்குப் பொருள் இல்லை.
இரண்டு பகுபத உறுப்புகளுக்கு இடையில் வந்து அவற்றை இணைப்பதே சாரியையின் செயற்பாடாகும். அன், அம், அத்து, அற்று முதலியன சாரியைகள் ஆகும்.
சாரியை எடுத்துக்காட்டு:
சாரியை  | ||
|---|---|---|
நடந்தனன்  | நட + ந்த் + அன் + அன் =  | அன் →  | 
நடந்தான்  | நட + ந்த் + த் + ஆன் =  | ஆன் →  | 
புளியங்காய்  | புளி + அம் + காய் =  | அம் →  | 
மரத்தை  | மரம் + அத்து + ஐ =  | அத்து →  |